/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
11 'சிசிடிவி' கேமரா, புதிய ஆசிரியர்களுடன்வழக்கம்போல் இயங்கிய அரசு பள்ளி

ADDED : பிப் 13, 2025 01:19 AM
11 'சிசிடிவி' கேமரா, புதிய ஆசிரியர்களுடன்வழக்கம்போல் இயங்கிய அரசு பள்ளி
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, 8ம் வகுப்பு மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி, புதிய ஆசிரியைகள், 'சிசிடிவி' கேமரா மற்றும்
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்த, 13 வயது மாணவியை, அப்பள்ளி ஆசிரியர்கள், 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக கடந்த, 5ல் கைது செய்யப்பட்டனர். பள்ளி மீண்டும், 7ல் திறக்கப்பட்டது. ஆனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை ஆகியோரிடம், பல கோரிக்கைகள் வைத்தனர்.
இதை பரிசீலிப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து கடந்த, 10ல் பள்ளிக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்பினர். நேற்று முன்தினம் தைப்பூச விடுமுறை. இதையடுத்து நேற்றும் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது. கைதான, 3 ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன நிலையில், மீதமுள்ள, 4 ஆசிரியைகளும் மாற்றுப்பணியில் வேறு பள்ளிக்கு அனுப்பப்பட்டு, வேறு பள்ளிகளில் பணிபுரிந்த,
7 ஆசிரியைகள் இப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டனர்.இப்பள்ளியில், 65 மாணவர்கள், 75 மாணவியர் என, 140 பேர் பயின்று வருகின்றனர். கடந்த, 10ல், 80 மாணவ, மாணவியர் வந்த நிலையில் நேற்று, 114 பேர் பள்ளிக்கு வந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. வரும் நாட்களில் அனைவரும் வருவர். பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும், 11 'சிசிடிவி' அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.