/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.11.41 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்
/
ரூ.11.41 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்
ரூ.11.41 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்
ரூ.11.41 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கம்
ADDED : பிப் 19, 2025 01:32 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 11.41 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை, அமைச்சர் சக்கரபாணி நேற்று துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 2.35 கோடி ரூபாய் மதிப்பில், 10 வகுப்பறைகள் கட்டும் பணியை, அமைச்சர் சக்கரபாணி நேற்று துவக்கி வைத்தார். நந்தகொண்டப்பள்ளி உள்ளிட்ட, 7 கிராமங்களில் புதிய பகுதிநேர ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். சூளகிரியில், துாய்மை பாரத இயக்க திட்டத்தில், 3 கோடி ரூபாயில், 20 பஞ்.,க்களிலுள்ள, 41,205 குடியிருப்புகள் பயனடையும் வகையில், மலகசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 7.38 லட்சம் ரூபாயில் புதிய போர்வெல், காலிங்கவரம் பஞ்.,ல், 49.67 லட்சம் ரூபாய் மற்றும் நெரிகம், சின்னாரன்தொட்டியில், 99.34 லட்சம் ரூபாய் மதிப்பில் என, 3 துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பெத்தசிகரலப்பள்ளியில், 11.97 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தேன்துர்க்கம் கிராமத்தில், 16.55 லட்சம் ரூபாயிலும் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர், பண்டப்பள்ளி கிராமத்தில், 79.44 லட்சம் ரூபாய் மதிப்பில், பந்தப்பள்ளி வரையும், அத்திமுகம் முதல் தின்னுார் வரை, 1.55 கோடி ரூபாய் மதிப்பிலும் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, கொத்துார், மோரனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில், 68.46 லட்சம் மதிப்பில், புதிதாக, 2 வகுப்பறை கட்டும் பணிகளை, அமைச்சர் துவக்கி வைத்தார்.
அதேபோல், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., 10 வது வார்டில், 1.19 கோடி மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, மிட்டஹள்ளி புதுாரில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம், தடுப்புச்சுவர், சிமென்ட் சாலை ஆகிய பணிகளை, அமைச்சர், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் தமிழியக்க விழா
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோட்டிலுள்ள, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழியக்க விழா நேற்று நடந்தது. பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் அன்பரசன் வரவேற்றார். வி.ஐ.டி., வேந்தரும், தமிழியக்க தலைவருமான முனைவர் விசுவநாதன் தலைமை வகித்து பேசினார். அவருக்கு, பள்ளி தாளாளர் சங்கீதா அன்பரசன், பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில், தமிழியக்கம் அமைப்பு செயலாளர் பேராசிரியர் வணங்காமுடி, தமிழியக்கம் மாநில செயலாளர் சுகுமார், பொதுச் செயலாளர் கவியருவி அப்துல்காதர், மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகர் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறுப்பினர் படிவ கட்டண காசோலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ஷர்மிளா, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி மேலாளர் பூபேஷ் செய்திருந்தார்.