/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரமற்ற 12 டன் ரேஷன் அரிசி திருப்பி அனுப்ப உத்தரவு
/
தரமற்ற 12 டன் ரேஷன் அரிசி திருப்பி அனுப்ப உத்தரவு
ADDED : பிப் 21, 2025 01:13 AM
தரமற்ற 12 டன் ரேஷன் அரிசி திருப்பி அனுப்ப உத்தரவு
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கிருஷ்ணகிரி மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் கிருஷ்ணகிரி வட்ட செயல்முறை கிடங்கில், பொது வினியோக திட்டத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
பொது வினியோக திட்டத்திற்கு வழங்க, தனியார் அரவை முகவர் ஆலையிலிருந்து வரப்பெற்ற புழுங்கல் அரிசியை (பொது ரகம்) ஆய்வு மேற்கொண்டார்.  இருப்பில் இருந்த, 12 டன் அரிசி வணிக தரத்துடன் இல்லாததால் அதை மீண்டும் தொடர்புடைய அரவை முகவர் ஆலைக்கு அனுப்பி, வணிக தரத்துடன் அரவை செய்து, மீண்டும் சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, தனியார் அரவை முகவர் ஆலைக்கு, 12 டன் அரிசி திருப்பி அனுப்பப்பட்டது.

