/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆவல்நத்தம் வனத்தில் 2 யானைகள் முகாம்
/
ஆவல்நத்தம் வனத்தில் 2 யானைகள் முகாம்
ADDED : ஏப் 15, 2025 01:54 AM
ஆவல்நத்தம் வனத்தில் 2 யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி,வேப்பனஹள்ளி அருகே, ஆவல்நத்தம் வனப்பகுதியில், 2 யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்தையொட்டிய கிராம விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 2 யானைகள், பதிமடுகு, தீர்த்தம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. இவற்றை நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர், கர்நாடக வனத்திற்குள் விரட்ட முயற்சித்தனர்.
ஆனால், 2 யானைகளும், ஆவல்நத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தன. தொடர்ந்து, வனத்துறையினர் ஆவல்நத்தம் வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி, வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் யாரும் காவலுக்கு செல்ல வேண்டாம். யானைகள் குறித்து நடமாட்டம் அறிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிகa்க தெரிவித்தனர். ஆவல்நத்தம் வனத்திற்குள் பல ஆண்டு
களுக்கு பிறகு, தற்போது தான் யானைகள் வந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.