ADDED : ஜூலை 02, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள சிறப்பு துணை தாசில்தார் கோகுல கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, வேட்டியம்பட்டி ஏரி அருகே மற்றும் கே.ஆர்.பி., அணை சாலை முத்துராயன் கொட்டாய் பகு-திகளில், இரு லாரிகளில் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதி-காரிகள் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன், காவேரிப்பட்டணம் போலீசார் இரு லாரிகளையும் பறிமுதல் செய்து, விசாரிக்கின்-றனர்.