/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காரிலிருந்த ரூ.5 லட்சம் திருட்டு டிரைவர் மீது போலீசில் புகார்
/
காரிலிருந்த ரூ.5 லட்சம் திருட்டு டிரைவர் மீது போலீசில் புகார்
காரிலிருந்த ரூ.5 லட்சம் திருட்டு டிரைவர் மீது போலீசில் புகார்
காரிலிருந்த ரூ.5 லட்சம் திருட்டு டிரைவர் மீது போலீசில் புகார்
ADDED : பிப் 09, 2025 01:06 AM
காரிலிருந்த ரூ.5 லட்சம் திருட்டு டிரைவர் மீது போலீசில் புகார்
ஓசூர்:கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி திலக் நகரை சேர்ந்தவர் முரளிமோகன் ரெட்டி, 41. வியாபாரி. இவருக்கு, தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் கிராமத்தில் பண்ணை நிலம் உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க, கடந்த மாதம், 25ல், 5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு, தன் டொயோட்டா லெஜண்டர் காரில் வந்தார். அவரது நண்பரான ஸ்ரீதர்ரெட்டி மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் நந்தீஸ் உடன் வந்தனர். மைசூரு கவுசியா நகரை சேர்ந்த ஷேக் முகமது யூசப் என்பவர் காரை ஓட்டினார். பண்ணைக்கு சென்ற பின் மதியம், 2:00 மணிக்கு, கார் டிரைவர் ஷேக்முகமது யூசப்பை தேடியபோது காணவில்லை. அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.
காரின் சாவி டிரைவரிடம் இருந்ததால், தன் வீட்டிலிருந்து மாற்றுச்சாவியை எடுத்து வந்து, காரை திறந்து பார்த்தபோது, 5 லட்சம் ரூபாயை காணவில்லை. மேலும், பண்ணையில் பணியாற்றும் பிரகாஷ் என்பவரது ஹோண்டா யுனிகார்ன் பைக்கையும் காணவில்லை. டிரைவர் ஷேக் முகமது யூசப், 5 லட்சம் ரூபாய், கார் சாவி மற்றும் பைக் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக, முரளிமோகன் தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். முரளிமோகனிடம் கடந்த, 4 மாதங்களுக்கு முன்தான், ஷேக் முகமது யூசப் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.