/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களை தேடி மருத்துவம் 5.43 லட்சம் பேர் பயன்
/
மக்களை தேடி மருத்துவம் 5.43 லட்சம் பேர் பயன்
ADDED : ஆக 06, 2024 01:32 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்ட, 4-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ம) சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்கள் உட்பட 14 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சரயு வழங்கி பேசுகையில், 'சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில் கடந்த, 2021- ஆக., 5ல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் மூலம், 5,43,162 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்,' என்றார்.
சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார், மருத்துவர் வித்யா, கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.