மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு
ADDED : செப் 08, 2025 10:55 AM

சென்னை: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டு உள்ள அறிககையில் கூறி இருப்பதாவது;
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு மல்லை சத்யாவுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், அந்த கடிதத்துக்கு பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவும் இல்லை, விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, மதிமுகவின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
மேலும், மல்லை சத்யா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகள் விதி 19, பிரிவு- 5, விதி 19, பிரிவு- 12, விதி 35, பிரிவு- 14, விதி 35 பிரிவு 15, விதி 35, பிரிவு 14- இன் படி துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.