/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீர்ப்பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு; மக்கள் வாக்குவாதம்

ADDED : ஜூலை 03, 2024 07:58 AM
கிருஷ்ணகிரி, : காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில், திம்மாபுரம் ஏரி உள்ளது. இங்-கிருந்து மலையாண்டஹள்ளி, செட்டிமாரம்பட்டி, பெரமச்சி-கொட்டாய் வழியாக பள்ளிப்பட்டி ஏரிக்கு வாய்க்கால் மூலம் நீர் செல்கிறது. இந்த ஏரி மூலம், அப்பகுதியில், 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
திம்மாபுரம், பஞ்., பெரமச்சிகொட்டாய் அருகே பள்ளிப்பட்டி ஏரிக்கு செல்லும் நீர்ப்பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து, சிலர் வீடுகள் கட்டியுள்ளனர். இதனால், பள்ளிப்பட்டி ஏரிக்கு நீர் செல்ல முடியாத சூழல் உள்ளது எனக்கூறி, அப்பகுதி மக்கள், வீடு கட்டி வருவோரிடம் நீர்நிலை வாய்க்காலில் கட்டப்பட்ட வீடுகளை உடனடியாக அகற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பட்டணம் எஸ்.ஐ.,மோகன்ராஜ் மற்றும் போலீசார் பேச்-சுவார்த்தை நடத்தினர். மேலும் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். அதுவரை வீடு கட்டும் பணியை நிறுத்துங்கள் எனக்கூறி, சமாதானம் செய்து, இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.