/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர் விடுதிகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
/
மாணவர் விடுதிகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
மாணவர் விடுதிகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
மாணவர் விடுதிகளில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 02, 2024 06:14 AM
ஊத்தங்கரை : ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஊத்தங்கரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதி-களில், நேற்று ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்-செல்வம் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்-பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பிறகு உணவில் குறை இருப்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் மொபைலில் பேசி, சிறந்த முறையில் உணவு சமைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்க, ஹாஸ்டல் நிர்வாகிகளிடம் கூறினார். மேலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, மத்துார் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராசன், வார்டு செயலாளர் அருளா-னந்தம், தகவல் தொழில்நுட்ப பிரிவு நித்தியானந்தம், குமரன், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.