/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கைதான என்.சி.சி., அலுவலர் 'சஸ்பெண்ட்'
/
கைதான என்.சி.சி., அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 10, 2024 05:07 AM
கிருஷ்ணகிரி: போலி என்.சி.சி., முகாம் நடத்தி பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான என்.சி.சி., அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, அதில் கலந்து கொண்ட மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி சிவராமன் கைது செய்யப்பட்டார். கைதுக்கு முன் எலி மருந்து சாப்பிட்டு கடந்த மாதம், 23ல் இறந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளில் விசாரித்து வரும் நிலையில், இதுவரை, 16 பேர் கைது செய்யப்-பட்டுள்ளனர்.இதில், கடந்த சில தினங்களுக்கு முன் போலி என்.சி.சி., முகாம் நடந்ததை மறைத்த குற்றத்திற்காக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும், என்.சி.சி., அலுவலரான ஆசிரியர் கோபு, 47, கைது
செய்யப்பட்டார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.