/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் திருடியவர் கைது இருவருக்கு வலை
/
பைக் திருடியவர் கைது இருவருக்கு வலை
ADDED : ஆக 31, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த சோமநாதபுரத்தை சேர்ந்தவர் நிரஞ்சன், 31, தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 29ல், வீட்டின் முன் தன் ஹோண்டா யுனிகார்ன் பைக்கை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருட முயன்றனர். இதை கவனித்த நிரஞ்சன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.
இதில் ஒருவர் பிடிபட்டார். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவரை குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், வேலூர் மாவட்மம் பேரணாம்பட்டை சேர்ந்த பிரகாஷ், 30, என
தெரிந்தது-. அவரை கைது செய்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான வாணியம்பாடி பாபி, சதீஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.