/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கம்யூ., கட்சிகள் மறியல் போராட்டம்

ADDED : ஆக 02, 2024 01:20 AM
கிருஷ்ணகிரி, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு, கேரளாவை புறக்கணித்ததை கண்டித்து, கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, கம்யூ., கட்சிகள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மா.கம்யூ., மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமைய்யா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கண்ணு, சிவராஜ், சக்கரவர்த்தி, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், சாம்ராஜ் உட்பட பலர் பேசினர்.
போராட்டத்தில், தளி தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில், பீஹார் மாநிலத்திற்கு, 31,000 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு, 16,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி உள்ளனர். இந்தியாவில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசம், 142 கோடி மக்களை கொண்டுள்ள நாட்டில், அனைவருக்கும் பொதுவான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில்பாதை திட்டம் தொடங்கப்படும் என்று, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.
இவ்வாறு, அவர் பேசினார்.