/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரம்ம மலைக்கு அடிப்படை வசதிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை
/
பிரம்ம மலைக்கு அடிப்படை வசதிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை
பிரம்ம மலைக்கு அடிப்படை வசதிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை
பிரம்ம மலைக்கு அடிப்படை வசதிகள் பக்தர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை
ADDED : செப் 17, 2024 01:13 AM
பிரம்ம மலைக்கு அடிப்படை வசதிகள்
பக்தர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை
ஓசூர், செப். 17-
தமிழக எல்லையான ஓசூரில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் கோவில்கள் தனித்தனியாக மலை மீது அமைந்துள்ளன.
இந்த மூன்று மலைகளும், ஒரே நேர்க்கோட்டில் உள்ளது மிகவும் சிறப்பு. விஷ்ணு மற்றும் சிவன் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதிகள் உள்ளன. ஆனால், பிரம்ம மலைக்கு செல்ல சரியான படிக்கட்டுகள் மற்றும் சாலை வசதி இல்லை.
அதனால், ஓசூர் பகுதி பக்தர்கள் ஒன்றிணைந்து, கோவிலுக்கு செல்ல பாதை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன உரிமையாளரான சீனிவாசன் என்பவர், தன் சொந்த செலவில், சாலை அமைக்க உறுதி கொடுத்துள்ளார். அதேபோல், கோவில் கட்டும் பணி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், பிரம்ம மலை அடிவாரத்தில் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பிரம்மாவுக்கு புதிய கோவில் கட்டுவது, குளம் வெட்டுவது, கோவிலுக்கு செல்லும் வழியில் நுழைவாயில் அமைப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்வது, நிதி திரட்டுவது என முடிவானது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நபர்கள், ஒவ்வொரு பணியை ஏற்று சொந்த செலவில் செய்வதாக உறுதியளித்தனர்.

