/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குறுகிய கால பயிற்சிக்கு நேரடி சேர்க்கை தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
/
குறுகிய கால பயிற்சிக்கு நேரடி சேர்க்கை தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
குறுகிய கால பயிற்சிக்கு நேரடி சேர்க்கை தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
குறுகிய கால பயிற்சிக்கு நேரடி சேர்க்கை தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:12 AM
ஓசூர் : ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சிக்-கான நேரடி சேர்க்கை நடப்பதாக, கலெக்டர் சரயு அறிவித்-துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பின்னலாடை மற்றும் தையல் இயந்திரம் இயக்குபவர் தொழில்பிரிவில், 45 வது அணிக்கான நேரடி சேர்க்கை நாளை (ஜூலை 3) துவங்கி, வரும், 24 வரை நடக்கிறது. குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 40 வயதிற்கு உட்பட்டவர்கள், பள்ளி படிப்பை முடித்த-வர்கள், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்-ணப்ப கட்டணமாக, 50 ரூபாய், சேர்க்கை கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, 3 மாதத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உறுதியாக வேலை-வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள அனைவரும் தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் நகலுடன் சென்று, ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலை-யத்தில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் அல்லது முதல்வர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04344 262457 என்ற தொலைபேசி மூல-மாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்-டுள்ளது.