/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புரட்டாசி மாத பிறப்பு எதிரொலி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

ADDED : செப் 16, 2024 02:35 AM
போச்சம்பள்ளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுவது வழக்கம். இங்கு காய்கறிகள், சிறுதானிய வகைகள் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் அதிகளவில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் தானிய வகைகளை வாங்கவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் வருவது வழக்கம்.
இந்நிலையில் நாளை, புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலியால், நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 2,000க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல், சுற்று வட்டார பகுதியிலுள்ள அசைவ பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை வாங்க குவிந்தனர்.
இதனால், 12 கிலோ முதல், 14 கிலோ வரை எடை கொண்ட ஆடுகள், 8,000 ரூபாய் முதல், 9 ரூபாய் வரையும், 15 கிலோ முதல், 20 கிலோ எடை கொண்ட ஆடுகள், 10,000 ரூபாய் முதல், 16,000 ரூபாய் வரையும் விற்பனையானது. புரட்டாசி மாத பிறப்பு எதிரொலியால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானது.