ADDED : மே 01, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. அரசு பள்ளியில், 9 ம்
வகுப்பு படிக்கிறார்; கடந்த, 27 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து
வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர்
போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், சிந்தல்தொட்டியை
சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ், 20, மீது சந்தேகம் இருப்பதாக
குறிப்பிட்டுள்ளார். போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.