/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தங்கும் விடுதி உரிமையாளர் ஓசூரில் கழுத்தறுத்து கொலை
/
தங்கும் விடுதி உரிமையாளர் ஓசூரில் கழுத்தறுத்து கொலை
தங்கும் விடுதி உரிமையாளர் ஓசூரில் கழுத்தறுத்து கொலை
தங்கும் விடுதி உரிமையாளர் ஓசூரில் கழுத்தறுத்து கொலை
ADDED : ஜூலை 06, 2024 08:26 AM
ஓசூர்: ஓசூரில், தங்கும் விடுதி நடத்தும் உரிமையாளர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கொண்ட-வார்பள்ளியை சேர்ந்தவர் கலுாரி அசானய்யா, 26. இவரது மனைவி பீராம்பி. இவர்களுக்கு மூன்று மாத பெண் குழந்தை உள்ளது. கலுாரி அசா-னய்யா கடந்த நான்கு மாதமாக கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே மடிவாளா மாருதி நகரில் வசிக்கும் தன் தம்பி இமாம் உசேன், 23, என்பவருடன் தங்கியிருந்தார். கடந்த ஏப்ரலில், தனது உறவினரான சின்னபாலுடு என்பவருடன் சேர்ந்து, ஓசூரில் ஆண்கள் தங்கும் விடுதி நடத்த வாடகைக்கு பில்டிங் தேடி வந்தார்.
ஓசூர் தனியார் கல்லுாரி அருகே காமராஜ் நகரில், அரசனட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவ-ருக்கு சொந்தமான, மூன்று மாடி கட்டடத்தை, 70 ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்கு எடுத்த கலுாரி அசானய்யா முன்பணமாக, மூன்று லட்சம் ரூபாய் வழங்கினார். கடந்த, 1ல், வாடகைக்கு எடுத்த கட்டடத்தில் ஆண்கள் விடுதியை ஆரம்-பித்து நடத்த துவங்கினார். அங்குள்ள ஒரு அறையில் அவர் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு தன் தம்பி இமாம் உசேனுக்கு போன் செய்து, வாஷின் மெஷின் வாங்க வேண்டும் என பேசினார். மதியம், 3:00 மணிக்கு பின் கலுாரி அசானய்யா மொபைல்போன் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்-தது. அவரது மனைவி பீராம்பி போன் செய்து பார்த்து விட்டு, இமாம் உசேனை நேரில் சென்று பார்த்து விட்டு வருமாறு கூறியுள்ளார். இதனால் இமாம் உசேன், நேற்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு காலை, 10:30 மணிக்கு கலுாரி அசா-னய்யா நடத்தி வரும் விடுதிக்கு சென்றார்.
அங்கு இரண்டாவது மாடி அறைக்கு சென்று பார்த்த போது, கலுாரி அசானய்யா கழுத்தறுக்கப்-பட்டு, வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சிய-டைந்த இமாம் உசேன், ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், கொலையான கலுாரி அசா-னய்யா, தங்கும் விடுதி துவங்க பில்டிங்கை தேர்வு செய்து விட்டு, 10 நாட்களுக்கு முன் தனது தம்பியுடன் கர்நாடகா மாநிலம், மடிவாளாவில் தங்கியிருந்தார். அப்போது அங்கு சென்ற உற-வினர் சின்னபாலுடு, இருவரும் சேர்ந்து தங்கும் விடுதி நடத்தலாம் என கலுாரி அசானய்யாவிடம் கேட்டுள்ளார். அதற்கு, தனியாக நடத்தி கொள்வ-தாக அவர் கூறியுள்ளார்.
அதற்கு, நான் இல்லாமல் எப்படி விடுதி நடத்து-கிறாய் என பார்க்கிறேன் என, கலுாரி அசானய்-யாவை, சின்னபாலுடு மிரட்டி விட்டு சென்றது தெரியவந்தது. இதனால், கொலையில் அவருக்கு தொடர்பு உள்ளதா அல்லது வேறு ஏதாவது முன்-விரோதம் காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.