/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபானம் கடத்தல் இரு வாலிபர்களுக்கு காப்பு
/
கர்நாடகா மதுபானம் கடத்தல் இரு வாலிபர்களுக்கு காப்பு
கர்நாடகா மதுபானம் கடத்தல் இரு வாலிபர்களுக்கு காப்பு
கர்நாடகா மதுபானம் கடத்தல் இரு வாலிபர்களுக்கு காப்பு
ADDED : ஏப் 03, 2024 02:11 AM
ஓசூர்,:ஓசூர்
சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், ஜூஜூவாடி
சோதனைச்சாவடியில் நேற்று, அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது,
ஓசூர் அடுத்த அக்கொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில்
பணியாற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் சவுகான், 21, என்ற பயணியின்
பையில், 60 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. அவரை கைது செய்த
போலீசார், மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை
போலீசார் இருதுக்கோட்டை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது,
அப்பகுதியில் கர்நாடக மதுபானத்தை பதுக்கியிருந்த மஞ்சுநாத், 36,
என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 25 மதுபான பாக்கெட்டுகள்
பறிமுதல் செய்யப்பட்டன.