/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
/
2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
2 நாள் மழைக்கே தத்தளித்த காவேரிப்பட்டணம் வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
ADDED : ஆக 13, 2024 08:04 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் பெய்த கனமழையால், மழைநீர் வெளி-யேற வழியின்றி, வீடுகளில் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை முதல் இரவு வரை கனமழையும் கொட்டி தீர்த்தது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், 30,000க்கும் மேற்-பட்டோரும், அதையொட்டி மிட்டஹள்ளி பஞ்.,ல், 1,500க்கும் மேற்பட்டோரும் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் கடந்த, 2 நாட்-களாக பெய்த கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்ல வழியின்றி, காவேரிப்பட்டணம், மிட்டஹள்ளி பஞ்.,க்கு உட்-பட்ட எம்.ஜி.ஆர்., நகர், ஜீவா நகரிலுள்ள வீடுகளுக்குள் புகுந்-தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதி கால்வாய் பகுதிகளில், 70- சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளன. மீத-முள்ள கால்வாய்களையும் துார்வாருவதில்லை. இது குறித்து மாவட்ட கலெக்டர் வரை பல மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள வீடுகளுக்குள் மழை நீர், 3 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. மலையாண்டஹள்ளி, தாளாமடுவு, சவுளூர், சுக்க-ராண்டஹள்ளி பகுதிகளில் மழை நீர் தேங்கியும், பயிர்கள் நீரில் மூழ்கியும் உள்ளன.
ஓரிரு நாட்கள் பெய்த கனமழைக்கே இந்த நிலை என்றால், வடகிழக்கு பருவமழை காலத்தில், நாங்கள் இப்-பகுதியில் வாழமுடியாத சூழல் ஏற்படும்' என்றனர்.அப்பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சரயு கூறு-கையில், “சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும், நீர் வழிப்பா-தையை துார்வாராமல் விட்டதால், மழை நீர் சூழ்ந்துள்ளது. பொக்லைன் மூலம் மழைநீர் கால்வாய் துார்வார உத்தரவிட்-டுள்ளேன். இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

