/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை
ADDED : ஆக 22, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வினருக்கு
உறுப்பினர் அட்டை
ஓசூர், ஆக. 22-
ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சியினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் பகுதி செயலாளர்களான வாசுதேவன், ராஜூ, மஞ்சுநாத், அசோகா மற்றும் ஒன்றிய செயலாளர்களிடம் உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார்.
மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், சிவராமன், லட்சுமி ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.