/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நுாதன முறைகளில் பணம் மோசடி அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றம்
/
நுாதன முறைகளில் பணம் மோசடி அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றம்
நுாதன முறைகளில் பணம் மோசடி அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றம்
நுாதன முறைகளில் பணம் மோசடி அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றம்
ADDED : ஜூலை 06, 2024 08:42 AM
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நுாதன முறை-களில் பணமோசடி நடப்பது அதிகரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டுமென, சைபர் கிரைம் போலீசார் எச்ச-ரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி-யிருப்ப
தாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'பீடக்ஸ் ஸ்கேம்' என்ற பெயரில் பண மோசடி செய்வது அதிகரித்-துள்ளது. பீடக்ஸ் என்பது ஒரு வெளிநாட்டு கூரியர் நிறுவனம். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் நபர்கள், தாங்கள் பீடக்ஸ் கூரியரிலிருந்து பேசுவதாகவும், சட்டவிரோத பொருட்கள் உங்கள் பெயரில் வந்-துள்ளதாகவும், வழக்கு போடாமல் இருக்க பணம் கொடுங்கள் எனக்கூறி மோசடி நடக்கிறது.
இல்லையெனில், உங்கள் பிள்ளைகள் மீது பண-மோசடி, போதை பொருட்கள் கடத்தல் வழக்கு உள்ளது எனக்கூறி, உங்கள் பிள்ளைகளின் பதிவு செய்யப்பட்ட குரல் பதிவை அனுப்புவர். தொடர்ந்து உங்கள் வங்கி விபரங்களை கேட்டு, அதன்பின் ஸ்கைப் செயலியை பதிவிறக்கம் செய்யச்சொல்லி, வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, போலீசார் போல் உடையணிந்து, உங்-களை கைது செய்யப்போகிறோம் எனக்கூறி மிரட்டுவர்.
அதேபோல ஆர்.பி.ஐ., வங்கியிலிருந்து பேசு-கிறோம், உங்கள் வங்கி கணக்கை சரி பார்க்க வேண்டும். உங்கள் ஸ்கிரீனை ஷேர் செய்யுங்கள் எனக்கூறி, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பர். அது அரை மணி நேரத்தில், மீண்டும் உங்கள் கணக்குக்கே வரும் எனக்கூறியும் பண மோசடி நடக்கிறது. இதை நம்பி ஐ.டி., ஊழி-யர்கள், தொழலதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை ஏமாந்து வருகின்றனர். பொதுக்கள் விழிப்-புடன் இருக்க
வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., சங்கு கூறுகையில், '' போலி அழைப்பு வந்தால் உடன-டியாக துண்டிக்க வேண்டும். அவர்கள் கூறுவது போல், எதிலும் சம்பந்தம் இல்லாதபோது, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்-1930 எண்ணிற்கு அழைக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய
வேண்டும்.
கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில், இது-வரை பீடக்ஸ் ஸ்கேம் அழைப்பு மோசடியில் மட்டும், 101 புகார்
பெறப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், 97 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். இந்த தொகையில், 47.50 லட்சம் ரூபாயை ஏமாற்றியவர்களின் வங்கி கணக்கில் முடக்கம் செய்யப்பட்டும், 13.50 லட்சம் ரூபாய் பணம் இழந்தவர்களுக்கு மீட்டு கொடுக்-கவும் பட்டுள்ளது,''
என்றார்.