/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
9 ஆண்டாக கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் அரசு பள்ளிக்கு மின் இணைப்பு துண்டிப்பு

ADDED : ஆக 25, 2024 12:59 AM
ஓசூர், ஆக. 25-
தேன்கனிக்கோட்டை சந்தைமேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (தமிழ் வழி) இயங்கி வருகிறது. இங்கு, 85 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 2010ல், பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த, 2015ல் இருந்து, மின்கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை செலுத்தவில்லை. மின் பழுதால் கடந்த, 2 ஆண்டுகளாக பள்ளியில் மின் வினியோகம் இல்லை. பள்ளி ஆசிரியர் மூலம், 2,200 ரூபாய் செலவு செய்த பின் கடந்த, 6 மாதமாக தான் மின் வினியோகம் சீரானது.
கடந்த, 16ல் பள்ளிக்கு வந்த மின் ஊழியர்கள், 9 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தாததால், 10,000 ரூபாய் பாக்கி உள்ளது. அதனால் சர்வீசை அகற்ற உயரதிகாரிகள் கூறியதாக, மின் மீட்டரை அகற்றி விட்டு, புதிய மின் இணைப்பு பெற்று கொள்ளுமாறு கூறி சென்றனர். வகுப்பறைகள் பகல் நேரத்தில் கூட இருள் சூழ்ந்தும், சமையலுக்கு கூட மின்சாரமின்றி சிரமம் ஏற்பட்டுள்ளது. உணவில் ஏதேனும் விழுந்தால் கூட கண்டறிய முடியாத நிலை உள்ளது.
இது குறித்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக்கல்வி) முனிராஜிடம் கேட்டபோது, ''ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தி விடுவோம். மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தால் அதை கட்டி விடலாம். வட்டார கல்வி அலுவலரிடம் கூறி, உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.