/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 01:18 AM
ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி
ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஆக. 22-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி, ஊராட்சி செயலாளர்கள் நேற்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில், ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 250க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்., 27ல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு, மாநில அளவில் பெருந்திரள் முறையிட்டு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கணேஷ், மாவட்ட மகளிர் அணித்தலைவர் மல்லிகா, செயலாளர் பூர்ணிமா, மாவட்ட அமைப்பு செயலாளர் இஸ்மாயில், செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.