/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மயான வழிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு மூதாட்டி சடலத்துடன் மக்கள் மறியல்

ADDED : செப் 08, 2024 01:20 AM
மயான வழிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு
மூதாட்டி சடலத்துடன் மக்கள் மறியல்
ஓசூர், செப். 8-
சூளகிரி அடுத்த ராமன்தொட்டி அருகே சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பு மக்கள், அப்பகுதி வனத்தையொட்டிய நிலத்தில், இறந்தவர்களை அடக்கம் செய்கின்றனர். வழியிலுள்ள ஓடையில் தடுப்பணை கட்டியதால், இறந்தவர்கள் சடலங்களை மாற்று வழியாக மக்கள் மயானத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். நேற்று சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி முனியம்மா, 80, என்பவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற வழி பட்டா நிலம் என்றும், ஊரில் திருமணம் நடக்க இருப்பதால், சடலத்தை அவ்வழியாக கொண்டு செல்ல கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், கடத்துார் - சின்னகுத்தி சாலையில், மூதாட்டி சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். மாலை, 4:00 முதல், 5:30 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முருகேஷ் மற்றும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரிகை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மூதாட்டி சடலத்தை எடுத்து செல்ல ஏற்பாடுகளை செய்து, அடக்கம் செய்ய வைத்தனர்.