/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
/
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
ADDED : செப் 17, 2024 01:12 AM
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு
முதல்வர் கோப்பை போட்டிகள்
கிருஷ்ணகிரி, செப். 17-
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இப்போட்டிகள், 8 இடங்களில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 10ல், பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்தார்.
நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். இதில், ஹேண்ட்பால், வாலிபால், கபடி, நீச்சல், கூடைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. பொதுமக்களுக்கு வரும், 19 முதல், 21 வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு வரும், 23 அன்றும், அரசு ஊழியர்களுக்கு, 24 அன்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண், 04343 291727, 74017 03487 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.