ADDED : ஆக 13, 2024 05:45 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கொல்லப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அப்பகுதியிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமலும், போதிய குடிநீர் வசதியின்றியும் தவித்தனர்.
உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்-கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசூர் அருகே தேவிசெட்டிப்பள்ளி கிராமத்திலுள்ள தரைமட்டம் பாலம் பகுதியில் மழைநீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதி சாலையில் நேற்று தேங்கியது. இதனால் அக்கிராமம் வழியாக செல்லும் சூடகொண்டப்பள்ளி, பலவனப்பள்ளி, முத்தாலி உட்-பட, 5 கிராமங்களுக்கு சென்ற வாகன ஓட்டிகள், மாணவ, மாண-வியர் மற்றும் விவசாயிகள், தேங்கிய மழைநீரில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.

