/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு
/
கே.ஆர்.பி., அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு
கே.ஆர்.பி., அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு
கே.ஆர்.பி., அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் நீர் திறப்பு
ADDED : ஆக 09, 2024 03:21 AM
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று, 423 கன அடி நீர், தென்-பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகு-தியில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 5ல், 396 கன அடியாக இருந்த நீர்வரத்து, 7ல், 763 கன அடியாக அதிகரித்தது. நேற்று, 545 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற வாய்க்காலில் முதல்போக பாசனத்திற்கு, 185 கன அடிநீர் திறக்-கப்பட்டுள்ளது. அதேபோல், கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று முன்தினம், 242 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று, 423 கன அடியாக நீர்தி-றப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மூலம், எண்ணேகொள் தடுப்பணை வழியாக கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் எண்-ணேகொள் தடுப்பணையில் ரசாயனம் கலந்த நுரை தேங்கி உள்-ளது.
மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, ஊத்தங்-கரையில் மட்டும், 1.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.