/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீசார் பணியை தடுத்த 6 பேருக்கு 'காப்பு'
/
போலீசார் பணியை தடுத்த 6 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 10, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகனசுந்தரம் மற்றும் போலீசார், சாத்தனுாரில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியிலுள்ள தனியார் நிலம் அருகே, சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்-தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது, 4 பேர் தப்-பினர். 6 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், தேவகானப்பள்ளி சங்கர், 35, பிரகாஷ், 30, மஞ்சுநாத், 42, சிவசங்கர், 42, கக்கதாசம் ஆனந்த், 35, பேலகொண்டப்பள்ளி சுரேஷ், 40, என தெரிந்தது. அவர்களிடமி-ருந்து, 30,250 ரூபாய் மற்றும் 8 டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

