/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை பணியாளர்கள் மேம்பாடு விழிப்புணர்வு கூட்டம்
/
துாய்மை பணியாளர்கள் மேம்பாடு விழிப்புணர்வு கூட்டம்
துாய்மை பணியாளர்கள் மேம்பாடு விழிப்புணர்வு கூட்டம்
துாய்மை பணியாளர்கள் மேம்பாடு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 22, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாய்மை பணியாளர்கள் மேம்பாடு
விழிப்புணர்வு கூட்டம்
ஓசூர், ஓசூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு விழிப்புணர்வு கூட்டம், நேற்று மாலை மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மாநகர அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, தொழில் கடன், வீட்டு மானிய வசதிகள், காப்பீடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில், தாட்கோ வங்கி மாவட்ட மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் இதர வங்கி மேலாளர்கள், துாய்மை பணியாளர்களுக்கு விளக்கிக் கூறினர்.