ADDED : ஆக 24, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: அஞ்செட்டியில் இருந்து, சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால், காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் அரசு பஸ்சில், நாட்றாம்பாளையம் பகுதி மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் தினமும் பயணம் செய்கின்றனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்கள் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

