/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கல் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்
/
கிரானைட் கல் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்
ADDED : ஆக 24, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர், தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் உள்ள லக்கசந்திரம் பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கல்லை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.