ADDED : ஜூலை 26, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி அடுத்த கோபசந்திரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 35, சுண்டட்டியில் மைன்ஸ் கம்பெனி வைத்துள்ளார். இவரிடம் உஸ்தனப்பள்ளி சேர்ந்த அருண்குமார், 29 என்பவர் சுப்பர்வைச-ராக பணியாற்றி வந்துள்ளார். இவர், ராமமூர்த்திக்கு தெரியாமல் கம்பெனியிலிருந்த, 2 யூனிட் உடைகற்களை திருடியுள்ளார். ராம-மூர்த்தி புகார் படி சூளகிரி போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
மளிகை கடையில் பணம் திருட்டு
கிருஷ்ணகிரி, ஜூலை 26-
அரூர் அடுத்த நரியம்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 47; ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்தவ-ருக்கு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 15,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. புகார்படி ஊத்தங்கரை போலீசார் விசாரிக்-கின்றனர்.