/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்குவரத்து நிறைந்த ஓசூர் இன்னர் ரிங்ரோடு தெருவிளக்குகள் அமைக்க முயற்சிக்காத மாநகராட்சி

ADDED : ஆக 22, 2024 01:17 AM
போக்குவரத்து நிறைந்த ஓசூர் இன்னர் ரிங்ரோடு
தெருவிளக்குகள் அமைக்க முயற்சிக்காத மாநகராட்சி
ஓசூர், ஆக. 22-
தொழிற்சாலை நகரான, ஓசூரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே இருந்து, சீத்தாராம்மேடு வரை, 8.6 கி.மீ., துாரம் இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. அதனால் இருவழிச்சாலையாக இருந்த இன்னர் ரிங்ரோடு, தற்போது, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் நகரின் முக்கிய சாலையான இன்னர் ரிங்ரோட்டில் தெருவிளக்கு வசதி இல்லை. மேடு, பள்ளம், வளைவுகளை கொண்ட இச்சாலையில் தெருவிளக்கு இல்லாததால், வாகன விளக்குகளின் வெளிச்சத்தில் தான், வாகன ஓட்டிகள் செல்ல வேண்டியுள்ளது. அது போதியளவில் இருக்காது என்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற வேண்டியுள்ளது.
தெருவிளக்குகள் அமைக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு. இரு மாதத்திற்கு ஒருமுறை மாநகராட்சி தான், மின்கட்டணம் செலுத்த வேண்டும். அதனால், மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்குகளை அமைக்கவில்லை. அதனால், இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணிக்க வேண்டியுள்ளது. இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் சாலையோரம் நடக்கிறது. மேலும், இச்சாலையில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கேட்டும், அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.