ADDED : ஜூலை 03, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மனுாரை சேர்ந்தவர் சித்தராஜ், 40, கூலித்தொழிலாளி. இவரும், அதேபகுதியை சேர்ந்த கார்த்திக், 26 என்பவரும் கடந்த, 1ம் தேதி காலை, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆதி திராவிடர் பாலிடெக்னிக் கல்லுாரி விடுதி அருகில், கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. இதில், சித்தராஜ் பலியானார், கார்த்திக் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.