/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்மாதிரி கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம்
/
முன்மாதிரி கிராமங்களை உருவாக்க பயிற்சி முகாம்
ADDED : ஆக 08, 2024 05:46 AM
தர்மபுரி: தமிழக அரசு வழிகாட்டுதலின் படி, தர்மபுரி மாவட்ட வள மைய அலுவலகத்தில், பஞ்.,களுக்கான வளர்ச்சி குறியீடுகள் அடிப்ப-டையில், முன்மாதிரி கிராமங்களை உருவாக்க, வட்டார அளவி-லான அலுவலர்களுக்கு, 2 நாள் பயிற்சி முகாம் நேற்று முன்-தினம் தொடங்கியது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் மணிவா-சகம் தலைமை வகித்தார்.
இதில், கிராம பஞ்., வளர்ச்சி திட்டம் தயாரித்தல், நீடித்த நிலை-யான வளர்ச்சிக்கான, 9 கருப்பொருட்கள், அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், கிராம பஞ்.,களை தரவரிசை படுத்துவதில், பிறதுறை அலுவலர்களின் பொறுப்புகள், உள்ளூர் அளவில் நீடித்த நிலை-யான, வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்த வேண்டிய நிதி இல்லா செயல்பாடுகள் மற்றும் குறைந்த நிதி தேவைப்படும் செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில், 7 அரசுத்துறைகளை சேர்ந்த, வட்டார ஒருங்கிணைப்பா-ளர்கள், சமூக நல மேற்பார்வையாளர்கள், விரிவாக்க அலுவ-லர்கள், குழந்தை நல அலுவலர்கள், தோட்டக்கலை உதவி இயக்-குனர், வேளாண்மை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.
இதில், வட்டார வளர்ச்சி கண்காணிப்பாளர் ரங்கநாதன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் பயிற்று-னர்கள் கலந்து கொண்டனர்.