நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகள் மனு
அரூர் அன்னை பசுமைபூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் திருமலை மற்றும் விவசாயிகள் கலெக்டர் சதீஷ்யிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: வரட்டாறு தடுப்பணையின் இடதுபுறம், 10 அடி ஆழத்திற்கு துார்வாருவதன் மூலம், தடுப்பணையில் கூடுதலாக நீரை தேக்கி வைக்கலாம். ஒடசல்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டியில் இருந்து கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர வசதியாக, அரசு பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.