ADDED : மார் 25, 2025 12:41 AM
என்.எஸ்.எஸ்.,சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த பாலிநாயனப்பள்ளி பாலிடெக்னில், நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், 'என் பாரதத்திற்கான இளைஞர்கள், டிஜிட்டல் கல்வியறிவுக்கான இளைஞர்கள்' சிறப்பு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.
சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் பற்றுச்சீட்டு வாங்கினால் மட்டும்தான் தரமான பொருளை நாம் பெற முடியும். பல்வேறு இடங்களில் காலாவதியான பொருட்களை விற்கும் நபரிடமிருந்து நம்மை எவ்வாறெல்லாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும், டிஜிட்டல் உலகில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக புரிந்து கொண்டு செயல்பட கூறினார்.
கல்லுாரி பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர், நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் முபாரக், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.