/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயணிகளுக்கானவிழிப்புணர்வு கூட்டம்
/
பயணிகளுக்கானவிழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஏப் 05, 2025 01:36 AM
பயணிகளுக்கானவிழிப்புணர்வு கூட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
சேலம் சர்க்கிள் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமை வகித்தார். தர்மபுரி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் காவுங்கர், ஓசூர் ரயில் நிலைய மேலாளர் பானுமதி, பி.டி.ஓ., உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பெண் ரயில் பயணிகளுக்கு, அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வழங்கப்பட்டன. மேலும், வாட்ஸ் ஆப்பில் குழு ஆரம்பிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட தினசரி பெண் ரயில் பயணிகள் அதில் இணைக்கப்பட்டனர். ரயிலில் செல்லும் போது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக வாட்ஸ் ஆப் குரூப்பில் புகார் செய்தால், அடுத்த ஸ்டேஷனில் போலீசார் வந்து உரிய நடவடிக்கை எடுப்பர் என, பெண் பயணி
களுக்கு உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பு குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

