ADDED : செப் 04, 2025 01:15 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில், 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் ஓலா, செய்யாறு பேர்வேர்ஸ் உள்ளிட்ட, 7 முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில், 10,000 பெண்கள் உட்பட மொத்தம், 15,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சிப்காட்டில் உள்ள நிறுவனங்கள், பணிப்பெண்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கவும், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்படி, சோதனைச்சாவடியுடன் கூடிய போலீஸ் ஸ்டேஷன் சிப்காட் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது.
அதை, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, சிப்காட் திட்ட இயக்குனர் சிந்து ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தனர். இதில், தாசில்தார் சத்யா, டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.