தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போச்சம்பள்ளியில் ஜமாபந்தி

போச்சம்பள்ளியில் ஜமாபந்தி

போச்சம்பள்ளியில் ஜமாபந்தி


ADDED : ஜூன் 17, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 12ல் ஜமாபந்தி தொடங்கி, மூன்று நாட்கள் கழித்து, நேற்று முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு பாளேதோட்டம், மூக்கம்பட்டி, கெண்டிகாம்பட்டி மற்றும் மத்துார் பிர்க்காவிற்கு உட்பட்ட ரங்கம்பட்டி உள்ளிட்ட ஐந்து வருவாய் கிராமங்களுக்கு, ஜமாபந்தி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:00 மணி முதல் தாசில்தார் அலுவலகம் வந்து, தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து பதிவு செய்து காத்திருந்தனர்.ஆனால், 11:00 மணிக்கு தொடங்க வேண்டிய ஜமாபந்திக்கு, அதன் அலுவலராக நியமிக்கப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி சற்று தாமதமாக வந்தார். இது குறித்து கீதாராணி கூறுகையில்,''வரும் வழியில் ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் பிரச்னை, அதை சரி செய்து விட்டு வருவதற்கு சிறிது தாமதமாகி விட்டது,'' என்றார். பின்னர் மக்களிடம் இருந்து அவர் மனுக்களை வாங்கி கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us