தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வலிப்பு வந்து விழுந்த மாணவன் உயிரிழப்பு

வலிப்பு வந்து விழுந்த மாணவன் உயிரிழப்பு

வலிப்பு வந்து விழுந்த மாணவன் உயிரிழப்பு


ADDED : ஜூன் 17, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குறியாட்டுக்காரனுாரை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் மாதன், 11. இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு அவரது இடது கை செயலிழந்துள்ளது.

இந்நிலையில் கடந்த, 13ம் தேதி மாலை, 5:00 மணியளவில் தன் உறவினர் லோகேஷ் என்பவருடன் சைக்கிளில் சென்றுள்ளார். வேடியப்பன் கோவில் அருகே சென்றபோது, மாதனுக்கு வலிப்பு வந்து கீழே விழுந்துள்ளார். தலையில் காயமடைந்த அவர், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இறந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us