/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீத ஓட்டளிப்பு விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டளிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 29, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓசூர் உழவர் சந்தை, மின்வாரிய
அலுவலகம், ஓசூர், காமராஜ் காலனி விளையாட்டு மைதானம் அருகே,
ஒன்னல்வாடி, சானசந்திரம், சூடுகொண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில்,
கிருஷ்ணகிரி வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தலைமையில், 100 சதவீத
ஓட்டளிப்பை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
பொதுமக்களுக்கு துண்டு
பிரசுரங்களை வழங்கினர். ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி,
துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப
மேலாளர் சுகுணா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் உட்பட பலர்
பங்கேற்றனர்.

