/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரியில் 6 மாதத்தில் 113 போக்சோ வழக்கு பதிவு
/
தர்மபுரியில் 6 மாதத்தில் 113 போக்சோ வழக்கு பதிவு
ADDED : ஆக 01, 2024 01:47 AM
தர்மபுரி: பாலியல் வன்கொடுமையை முற்றிலும் தடுப்பதற்காக, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த, மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 6 மாதத்தில், 113 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 126 போக்சோ வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். அதை கண்டறிந்து தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்-கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்-சட்டம் குறித்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிக-ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரிய, ஆசி-ரியைகளுக்கும் போக்சோ சட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்ப-டுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இதில், எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட சமூக நல அலு-வலர் பவித்ரா, டி.எஸ்.பி.,கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், சிறப்பு போக்சோ அரசு வக்கீல், குழந்தை நலக்குழு உறுப்பினர், நன்னடத்தை அலுவலர் மற்றும் அரசுத்-துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.