/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை
/
ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை
ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை
ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை
ADDED : ஜூலை 07, 2024 05:57 AM
ஓசூர் : ஓசூரில், ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-பாகலுார் சாலையில், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்துள்ளார். அதன் பின் எந்தவிதமான பண பரிவர்த்த-னையும் ஏ.டி.எம்., மையத்தில் நடக்கவில்லை. மணிக்கணக்கில் பரிவர்த்தனை நடக்காததால், வங்கி டெக்னீசியன் பிரிவுக்கு சந்-தேகம் வந்தது. இதனால் நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், ஏ.டி.எம்., மையத்திற்கு ஊழியர்கள் சென்று பார்த்தனர். அங்கு மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. திறந்து பார்த்த போது, காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டு, அதற்குள் இருந்த, 14.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டி-ருப்பது தெரிந்தது. ஊழியர்கள் கொடுத்த தகவல்படி, ஹட்கோ போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.
ஏ.டி.எம்., மையத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேம-ராவில், மர்ம நபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்-ளையில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் அதி-காலை, 2:00 மணிக்கு தற்போது கொள்ளையடிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் இருந்து, சற்று தொலைவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்.,ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். காவலாளி எழுந்து வந்-ததால் மர்ம கும்பல் தப்பி சென்றது.ஆனால், ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் காவலாளி இல்லாததால், கொள்ளை சம்பவத்தை எளிதாக மர்ம கும்பல் அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.