/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.17.72 லட்சம் ரூபாய் மோசடி தலைமையாசிரியர் மீது வழக்கு
/
ரூ.17.72 லட்சம் ரூபாய் மோசடி தலைமையாசிரியர் மீது வழக்கு
ரூ.17.72 லட்சம் ரூபாய் மோசடி தலைமையாசிரியர் மீது வழக்கு
ரூ.17.72 லட்சம் ரூபாய் மோசடி தலைமையாசிரியர் மீது வழக்கு
ADDED : மே 04, 2024 01:26 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பீர்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரபு, 38.
இவரிடம், அப்பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி வரும் ஜெயபால், ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கேட்டதாகவும், கடந்த, 2019ம் ஆண்டு பல்வேறு பரிவர்த்தனைகளாக, 17 லட்சத்து, 72,000 ரூபாய் கடன் பெற்று, தலைமையாசிரியர் ஜெயபாலுக்கு பணமாக கொடுத்ததாகவும், அப்பணத்தை அவர் திரும்ப தராமல் ஏமாற்றியதாகவும் கூறி, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் ஆசிரியர் பிரபு புகார் செய்தார். தலைமையாசிரியர் ஜெயபால் மீது மோசடி வழக்குப்பதிந்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.