/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆய்வு
/
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : பிப் 19, 2025 01:17 AM
2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. கடந்த, 2007ல், 40 கோடி ரூபாய் மதிப்பில், 16 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. விடுபட்ட பகுதிகள் மற்றும் மீதமுள்ள வார்டுகளுக்கு, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளை விரிவாக்கம் செய்ய, 49.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த டிச., 21ல், அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். நேற்று நகராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு, டி.பி., சாலையில் நடக்கும் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகளை, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி தலைவர் பரிதா நவாப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விடுபட்ட பகுதிகள் மற்றும் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கப்பணிகள் வரும் ஆக., மாதத்திற்குள் முடியும் என தெரிவித்தனர்.
நகராட்சி கவுன்சிலர்கள் சுனில்குமார், தேன்மொழி மாதேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.