ADDED : ஆக 08, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை தாலுகா சாலமரத்துப்பட்டி அருகே உள்ள கெரிகேப்-பள்ளியை சேர்ந்தவர் சஞ்சய், 24; இவர் கடந்த, 6 மாலை, 6:40 மணிக்கு, பஜாஜ் பல்சர் டூவீலரில், செட்டிப்பட்டி அருகே சென்ற-போது, அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படு-காயமடைந்த சஞ்சய், சம்பவ இடத்திலேயே பலியானார். கல்-லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு சேர்ப்ப பத்து பகுதியை சேர்ந்தவர் ராகேஷ், 22; லாரி டிரைவர்; இவர் கடந்த, 6 அதிகாலை, 2:15 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், போலுப்பள்ளி சிட்கோ நுழைவாயில் அருகே லாரியில் சென்றபோது லாரி கவிழ்ந்தது. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்-கின்றனர்.