ADDED : ஆக 01, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரியை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் பி.இ., முதலாமாண்டு படிக்கிறார்; கடந்த, 29 அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், நல்லகானகொத்-தப்பள்ளியை சேர்ந்த சக்திவேல், 23, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வரு-கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி திவ்யா, 20; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுாரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 26 காலை, 7:00 மணிக்கு வேலைக்கு சென்ற திவ்யா திரும்பவில்லை. அவ-ரது தாய் கலா, 38, புகார் படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்-றனர்.