/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு சாலை அமைத்த டவுன் பஞ்சாயத்து
/
20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு சாலை அமைத்த டவுன் பஞ்சாயத்து
20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு சாலை அமைத்த டவுன் பஞ்சாயத்து
20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு சாலை அமைத்த டவுன் பஞ்சாயத்து
ADDED : பிப் 08, 2025 12:44 AM
20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு சாலை அமைத்த டவுன் பஞ்சாயத்து
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், 20 ஆண்டுகளாக வழி பிரச்னை இருந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்சாலை அமைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தை சுற்றி, 36 கிராமங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் காவேரிப்பட்டணம் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், பெங்களூருவுக்கு பணிக்கு சென்று வருவர். இதனால் காவேரிப்பட்டணம் நகர், நான்கு ரோடு, சேலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொசமேடு அருகே தென்பெண்ணை ஆற்றோரம் பன்னீர்செல்வம் தெரு, சுபாஸ் சந்திர போஸ் தெரு வழியாக, நகருக்குள் செல்லாமல் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணகிரி செல்வோர் செல்லும் வகையில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட பணி, 90 சதவீதம் முடிந்தது. கொசமேடு அருகில், 20 அடியில் குப்பை கொட்டப்பட்டும், சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்தன. அங்கு வருவாய்துறையினர் நில அளவீடு பணிகள் செய்தும் சாலை போட முடியாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில், ஆர்.ஐ., புஷ்பலதா மற்றும் காவேரிப்பட்டணம் எஸ்.ஐ., சிவசந்தர் மற்றும் போலீசார் முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றி, தார்சாலை அமைக்கப்
பட்டது.இது குறித்து, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கூறுகையில், ''20 ஆண்டு வழி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அளந்து, இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தில் சாலை தடுப்பு மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சாலை மூலம் மிட்டஹள்ளி, குண்டலப்பட்டி, குரும்பட்டி, கால்வேஹள்ளி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து காவேரிப்பட்டணம் நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.